உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஸ்கூட்டர்  திருட்டு

 ஸ்கூட்டர்  திருட்டு

புதுச்சேரி: செக்யூரிட்டியின் ஸ் கூட்டர் மற்றும் மொபைல் போனை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். உருளையன்பேட்டை, அய்யனார் நகரை சேர்ந்தவர் ஜெயராமன், 65. இவர், ஒயிட் டவுன், கர்சேன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி, வேலை செய்யும் வீட்டு, காம்பவுண்டில், தனது ஸ்கூட்டரை நிறுத்திருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது, ஸ்கூட்டர் மற்றும் செக்யூரிட்டி அறையில் இருந்த மொபைல் போன் ஆகியவற்றை காணவில்லை. புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ஸ்கூட்டர் திருடிய நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி