மேலும் செய்திகள்
வாகனம் மோதி பெண் பலி
26-Dec-2024
வில்லியனுார்: அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தில் பட்ட பகலில் மொபைட்டில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விழுப்புரம் மாவட்டம், துளுக்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் இஜவுதீன், 58. இவர் தனது டி.வி.எஸ்., ரெஸ்ட்(பிஒய் 05-விபி 5294) ஸ்கூட்டியில் ெஹல்மட் அணிந்து கொண்டு புதுச்சேரி நோக்கி சென்றார்.பகல் 12:30 மணியளவில் அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ெஹல்மட் அணிந்த தலையில் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்தார். இது குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தாலே விபத்து ஏற்படுத்திய வாகனம் எது என தெரிந்து விடும். இந்நிலையில், பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவத்தில், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
26-Dec-2024