உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுதந்திர தினத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் தகவல்

சுதந்திர தினத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் தகவல்

புதுச்சேரி : சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் மற்றும் தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் செய்திக் குறிப்பு: நாட்டின் 79வது சுதந்திர தின விழா அரசு சார்பில், வரும் 15ம் தேதி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடக்கிறது. விழாவில், கலந்து கொள்ள வரும் பொது மக்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் வடக்குப்பகுதி வழியாக விழாவிற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் வாகன நிறுத்த அனுமதி பெற்றவர்கள் பழைய வடிசாராய ஆலை,புதிய ராஜ் நிவாஸ் வழியாகவும்மற்றும் ஓட்டல் புரோமினெட் வழியாகவும் அனுதிக்கப்படுவர். அவர்கள் வாகனங்களை விழா பந்தலின் வடக்கு பகுதியில் கடற்கரை சாலையின் கிழக்கு நடைமேடையில் நிறுத்த வேண்டும். மற்றவர்கள் தங்கள் வாகனங்களை கொம்பாங்கி வீதி, செயிண்ட் மார்ட்டின் வீதி மற்றும் லா தி லோரிஸ்தான் வீதியில் நிறுத்தி விட்டு நடந்து விழா பந்தலை அடைய வேண்டும். அதேபோல், விழாவிற்கு தெற்குபகுதி வழியாக வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் வாகன நிறுத்த அனுமதி பெற்றவர்கள் புஸ்ஸி வீதி வழியாக அனுமதிக்கப்படுவர். அவர்கள் வாகனங்களை விழா பந்தலின் தெற்கு பகுதியில் கடற்கரை சாலையின் கிழக்கு நடைமேடையில் நிறுத்த வேண்டும். மற்றவர்கள் தங்கள் வாகனங்களை சுப்ரென் வீதி மற்றும் வர்த்தக சபை அருகே நிறுத்திவிட்டு லே கபே சந்திப்பு வழியாக நடந்து விழா பந்தலை அடைய வேண்டும். அணி வகுப்பில் பங்கேற்பவர்கள் தங்களின் வாகனங்களை ரோமன் ரோலண்ட் வீதி, கஸ்ரேன் வீதி, சர்கூப் வீதி மற்றும் துமாஸ் வீதியில் பூஸ்ஸி வீதி நோக்கி பழைய துறைமுகம் வரை நிறுத்த வேண்டும். பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாகனங்களை பாரதி பூங்கா அருகே பெருமாள் கோவில் முன்புறம் கொடுக்கப்பட்டுள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்த வேண்டும். செயிண்ட் லுாயிஸ் வீதி, துய்மாஸ் வீதியில் லே கபே சந்திப்பில் இருந்து பழைய கோர்ட் சந்திப்பு வரை, புஸ்ஸி வீதி பழைய சட்டக் கல்லுாரி சந்திப்பிலிருந்து கடற்கரை சாலை சந்திப்பு வரை, மாகே லபோர்தனே வீதி, செயின்ட் ஆஞ்ஜி வீதியில் ஆம்பூர் சாலை சந்திப்பு, விக்டர் சிமோனல் வீதியில்அரசு மருத்துவமனை சந்திப்பு, ரங்கப்பிள்ளை வீதி வரை எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, பொது மக்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரும் தற்காலிக போக்குவரத்து ஏற்பாட்டை பின்பற்றி போக்குவரத்து போலீசாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை