மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் இன்று செடல் திருவிழா
27-May-2025
புதுச்சேரி : குருவப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நேற்று நடந்தது.வில்லியனுார் அடுத்த குருவப்பநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள செல்லமுத்து மாரியம்மன் கோவிலில், 18ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து, தினசரி சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது.நேற்று முன்தினம் ஐயனாரப்பன் சுவாமிக்கு பொங்கலிட்டு குதிரை விடப்பட்டது. இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.முக்கிய விழாவான செடல் திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை செடல் திருவிழா நடந்தது. வேண்டுதல் கொண்ட பக்தர்கள் செடலணிந்து நேர்த்தி கடன் செலுத்தினர். மதியம் பால் சாகை வார்த்தல் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.இன்று காலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டும், தொடர்ந்து அம்மனுக்கு அபிேஷக ஆராதனை நடக்கிறது. இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
27-May-2025