உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணவெளியில் ரூ.20 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கம்

மணவெளியில் ரூ.20 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கம்

அரியாங்குப்பம், : மணவெளியில் இரு இடங்களில் ரூ. 20 லட்சம் மதிப்பீல் கழிவுநீர் வாய்க்கால் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் மணவெளியில் உள்ள சிவலிங்கபுரம் குறுக்கு விதி, திருவள்ளுவர் வீதி ஆகிய இரு இடங்களில் ரூ. 20 லட்சம் மதிப்பீல், கழிவுநீர் வாய்க்கால் பணி நேற்று துவக்கப்பட்டது. இப்பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர் சுரேஷ் பா.ஜா.,தொகுதி தலைவர் ரஞ்சித்குமார், கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், கலைவாணன், தங்கதுரை, தனுசு,செழியன், செந்தில், இசைவேந்தன், சிலம்பு விக்னேஷ், பாண்டுரங்கன், ரகுராமன், சேனாதிபதி குமார், சசிகுமார், எழிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை