மதகடிப்பட்டு சந்திப்பில் பயன்பாட்டிற்கு வந்த சிக்னல்
திருபுவனை : மதகடிப்பட்டு மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில் போக்குரவத்து நெரிசலை தடுக்க புதிதாக அமைக்கப்பட்ட சிக்னல், 6 மாதங்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்தது.புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. அலுவலக நாட்களில் காலை, மாலையில் நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசலை தினம் சந்திக்க வேண்டி இருந்ததால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியுற்று வந்தனர்.இந்நிலையில் மதகடிப்பட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்கு முனை சந்திப்பில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனாலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிகாட்டப்பட்டது.அதையடுத்து, 6 மாதங்களுக்குப் பிறகு சிக்னல் விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.