உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நல்லாட்சி வாரத்தையொட்டி கையெழுத்து இயக்கம்

 நல்லாட்சி வாரத்தையொட்டி கையெழுத்து இயக்கம்

அரியாங்குப்பம்: நல்லாட்சி வாரத்தையொட்டி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், திட கழிவுகளை தரம் பிரிப்பது பற்றி விழிப்புணர்வு மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் எச்.ஆர்., ஸ்கொயர் இணைந்து தவளக்குப்பம் சந்திப்பில், சிறப்பு துப்புரவு பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். திட கழிவுகளை தரம் பிரிப்பது, பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, துாய்மை பணி நடந்தது. அதனை தொடர்ந்து, கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், கொம் யூன் பஞ்சாயத்து உதவிப் பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர்கள் சுரேஷ், சரஸ்வதி, அகிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை