உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தென்மண்டல ஸ்கேட்டிங் போட்டி; 400 மாணவர்கள் பங்கேற்பு

தென்மண்டல ஸ்கேட்டிங் போட்டி; 400 மாணவர்கள் பங்கேற்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த தென் மண்டல அளவிலான, 'ஸ்கேட்டிங்' போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 400 மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.புதுச்சேரி பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா, கலாம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் இணைந்து, லாஸ்பேட்டை அரசு ஸ்கேட்டிங் ரிங்க்கில், தென்மண்டல அளவிலான 'ஸ்கேட்டிங்' போட்டியை நடத்தின.துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி முதல்வர் புவனா வாசுதேவன் துவக்க நிகழ்ச்சியில் தலைமை தாங்கினார்.போட்டியில் பல்வேறு வயது பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே போட்டி நடந்தது. புதுச்சேரி, தமிழகம், கர்நாடகம், ஆகிய மாநிலங்களில் இருந்து, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை கிளப் தலைவர் வெங்கடேசன், செயலாளர் காமேஷ்வரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை