உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பளு துாக்கும் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு சபாநாயகர் வாழ்த்து

பளு துாக்கும் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு சபாநாயகர் வாழ்த்து

புதுச்சேரி: அகில இந்திய பள்ளி விளையாட்டு பெடரேஷன் சார்பில், பளு துாக்குதல் போட்டி நடந்தது. இதில், 45 கிலோ எடை பிரிவில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவி சரஸ்வதி வெள்ளிப் பதக்கம், 40 கிலோ எடை பிரிவில் மாணவி பிரியதர்ஷினி வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகள் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.நிகழ்ச்சியில், அசோக் பாபு எம்.எல்.ஏ., இந்திய பளு துாக்குதல் கூட்டமைப்பின் தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியா, பொது செயலாளர் அனந்த் கவுடா, புதுச்சேரி பயிற்சியாளர் கணபதி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை