சிங்காரவேலர் சிலைக்கு சபாநாயகர் மரியாதை
புதுச்சேரி: உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி அ.தி.மு.க., மாநில செயலாளரும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன், சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில மீனவர் அணி செயலாளர் ஞானவேல், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுதர்சன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.