புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் 'சீல்' வைக்கப்பட்ட தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்ததே கடந்த காங்., ஆட்சியில் தான் என, சபாநாயகர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், கூறியதாவது: போலி மருந்து தொழிற்சாலை குறித்து வைத்திலிங்கம் எம்.பி.,யும், முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் என்மீது அவதுாறு கூறி வருகின்றனர். ஆனால், அந்த தொழிற்சாலை, கடந்த 2010ல் எனது தொகுதிக்கு உட்பட்ட அபிேஷகப்பாக்கத்தில், வைத்திலிங்கம் உறவினர் இடத்தில் தொடங்கப்பட்டது. அதற்கான உரிமத்தை வைத்திலிங்கம் வழங்கியுள்ளார். பின், 2017ல் நாராயணசாமி முதல்வராகவும், வைத்திலிங்கம் சபாநாயகராக இருந்தபோது, தி ருபுவனை பாளையத்தில் போலி மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு போலி மருந்து கொள்முதல் விவகாரத்தில் முன்னாள் இயக்குநர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்தபோது, அந்த மருந்து கம்பெனி உரிமையாளரை கைது செய்ய நாராயணசாமியும், வைத்திலிங்கமும் வலியுறுத்தாது ஏன். காரணம் அந்த கம்பெனியில் நாராயணசாமியின் ரத்த சொந்தம் 50 சதவீத பங்குதாரராக உள்ளார். கடந்த காங்., ஆட்சியில் துணை சபாநாயகராக இருந்த பாலன், 2 ஆண்டிற்கு மேலாக புதுச்சேரியில் போலி மருந்து புழக்கத்தில் உள்ளதாக சட்டசபையிலும், வெளியிலும் புகார் கூறி வந்தார் . அன்று நாராயணசாமி எங்கு சென்றிருந்தார். அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னுடன், ஆண்டியார்பாளையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜா தான் உள்ளார். மதுரை ராஜா குறித்து ஆதாரம் அளித்தால் அதற்கு நான் பதில் சொல்ல தயாராக உள்ளேன். போலி மருந்து தொழிற்சாலை சம்மந்தமாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அதில், எனக்கு தொடர்பு இருப்பது கண்டறிந்தால், அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் தயாராக உள்ளேன். போலி மருந்து விவகாரத்தை கவர்னர் நேரடி மேற்பார்வையில் விசாரிக்கப்படுகிறது. விரைவில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார். நாராயணசாமிக்கும், வைத்திலிங்கத்துக்கும் பொய் தகவலை கூறுவதே வேலையாக கொண்டுள்ளனர். ரூ.669 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த சட்டசபை கட்டுவதற்கான திட்ட வரைவு அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிதி அமைச்சரை சந்தித்து முதல் கட்டமாக ரூ.100 கோடி கேட்டு மனு கொடுத்துள்ளேன். சட்டசபை கட்டுமான பணியை இந்த ஆட்சிக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
ரோடு ேஷாவிற்கு அனுமதி கூடாது
த.வெ.க., விஜய் 'ரோடு ேஷா'விற்கு அனுமதி மறுப்பது சரியான நிகழ்வு என்பது எனது கருத்து. பொதுவெளியில், பொதுக்கூட்டம் நடத்தலாம்' என்றார்.