உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேஷன் அட்டைதாரர்கள் ஆன்லைனில் சரிபார்க்கும் சிறப்பு முகாம் துவக்கம்

ரேஷன் அட்டைதாரர்கள் ஆன்லைனில் சரிபார்க்கும் சிறப்பு முகாம் துவக்கம்

புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதியில் ரேஷன் அட்டைதாரர்கள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கும் சிறப்பு முகாமை, முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் துவக்கி வைத்தார். புதுச்சேரி அரசின் குடிமைபொருள் வழங்கல் துறை மூலம் முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் ஆன்லைன் மூலம் சரிபார்க்க பொது சேவை மையத்தை அணுகலாம் என, அறிவுறுத்தப்பட்டது. இதையொட்டி, முத்தியால்பேட்டை தொகுதி மக்கள் சிரமமின்றி குடும்ப உறுப்பினர்கள் விபரங்களை ஆன்லைன் மூலம் சரி பார்க்க, இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன், இங்குள்ள தி.மு.க., அலுவலகத்தில் வாரந்தோறும் சனி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளார். இதன் துவக்க விழா, நேற்று முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. முகாமில், இந்த தொகுதியை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில், தி.மு.க., செயலாளர் சவுரிராஜன், அவை தலைவர் எழிலன், துணை செயலாளர் ரவி, மதன்பாபு, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் தங்கராசு, நிர்வாகிகள் பாபு, பிரகாஷ், பாஸ்கர், சந்துரு, சண்முகம், சிற்றரசு, நாகராஜ், எழில், சுதாகர், மகளிரணி தனம், துணை செ யலாளர் கலைவாணி, விமலா, சுதா, லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை