உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., சார்பில் விளையாட்டு போட்டி

பா.ஜ., சார்பில் விளையாட்டு போட்டி

புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ஜ., மகளிர் அணி நிர்வாகிகள் பதவியேற்பு, தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா தலைமை அலுவலகத்தில் நடந்தது.விழாவிற்கு, மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். இதில், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம்,வெங்கடேசன், அசோக்பாபு,மாநில பொதுச் செயலாளர்கள் மவுலித்தேவன், மோகன்குமார்,மாநில பொருளாளர் ராஜகணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.விழாவில், புதிதாக நியமிக்கப்பட்ட பா.ஜ., மகளிர் அணி நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில அளவில் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை மாநில மகளிர் அணி தலைவி ஜெயந்தி, பொதுச் செயலாளர்கள் ஹேமமாலினி, கோகிலா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை