மலர் கண்காட்சிக்காக ஸ்டால் அமைக்கும் பணி
புதுச்சேரி: மலர் கண்காட்சிக்காக ஸ்டால் அமைக்கும் பணி தாவரவியல் பூங்காவில் நடந்து வருகிறது. புதுச்சேரி வேளாண்துறை சார்பில் 35 வது ஆண்டு மலர், காய், கனி கண்காட்சி ஜன.30, 31,பிப்.1 ஆகிய 3நாட்கள் தாவரவியல் பூங்காவில் நடைபெறவுள்ளது. இதில்,20 வகையான மலர் செடிகளில், 35,000 செடிகள் மற்றும் ஆர்கானிக் காய்கறி, பழங்கள் ஆகியவை இடம் பெறுகிறது. மேலும், ஆர்கானிக் விவசாயிகளுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது.அதனையொட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு மற்றும் 70 ஸ்டால்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.