மேலும் செய்திகள்
மீன்வளத்துறையில் வாய்ப்புகள் மத்திய அமைச்சர் தகவல்
59 minutes ago
முதியவரிடம் ரூ. 1 லட்சம் மோசடி
1 hour(s) ago
அரசு துறைகளில் முறைகேடு: தணிக்கை அறிக்கையில் தகவல்
1 hour(s) ago
பா.ஜ., மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
1 hour(s) ago
புதுச்சேரி: மாநில அளவிலான மின் உள்ளடக்கப் போட்டியில், இரு ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கிய, கல்வி சார்ந்த படைப்புகள் 5 பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளது. பிள்ளைச்சாவடி நா. வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சசிகுமார் மற்றும் தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஷாலினி ஆகியோர் இணைந்து, இந்த மின் உள்ளடக்கப் படைப்புகளை உருவாக்கினர். இவர்களின் அனைத்து காணொளி மற்றும் ஒலிப்பதிவு படைப்புகளும், பாடக்கருத்துகளை மாணவர்களுக்கு எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்லும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கி உள்ளனர். இவர்களின் படைப்பு, சமக்ர சிக் ஷா சார்பில் நடந்த, மாநில அளவிலான மின் உள்ளடக்கப் போட்டியில் 5 பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளது. ஆசிரியர் சசிக்குமார் காணொலி பிரிவில் அடிப்படை மற்றும் ஆயத்த நிலையில், முதல் இரண்டு இடங்களையும், ஒலிப்பதிவு பிரிவு அடிப்படை நிலையில் இரண்டாம் இடம் பிடித்து மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வென்றுள்ளார். இதேபோல், ஆசிரியர் ஷாலினி காணொலி பிரிவு தொடக்க நிலையில் முதலிடம், ஒலிப்பதிவு பிரிவு தொடக்க நிலையில் மூன்றாம் இடம் பிடித்து 30 ஆயிரம் ரூபாய் பரிசு வென்றார். சாதனை படைத்த ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, துணை இயக்குநர் (பெண்கல்வி) மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பாராட்டி, தொடர்ந்து இதுபோன்ற புதுமையான முயற்சிகளை மேற்கொள்ள ஊக்கமளித்தனர். பள்ளி துணை முதல்வர், தலைமையாசிரியர், கல்வியாளர்கள், சக ஆசிரியர்கள் பாராட்டினர்.
59 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago