உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி

புதுச்சேரி : மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சபாநாயகர் செல்வம் பரிசு வழங்கினார்.புதுச்சேரி வாலிபால் சங்கம் சார்பில், மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. இதில், ஆண்கள் பிரிவில் 31 அணிகள், பெண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் வம்புப்பட்டு அப்துல் கலாம் அணியும், கூனிச்சம்பட்டு பீனிக்ஸ் அணியும் மோதின. வம்புப்பட்டு அணி முதலிடத்தையும், கூனிச்சம்பட்டு அணி 2ம் இடத்தையும் பிடித்தன.பெண்கள் பிரிவு இறுதிபோட்டியில் பங்கேற்ற கொம்பாக்கம் மாறன் அணி முதலிடமும், காரைக்கால் அணி 2ம் இடமும் பிடித்தன.வெற்றி பெற்ற அணிகளுக்கு வாலிபால் சங்கத் தலைவரும், சபாநாயகருமான செல்வம், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இதில், புதுச்சேரி வாலிபால் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி