உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குளத்தில் மூழ்கி மாணவர் பலி

குளத்தில் மூழ்கி மாணவர் பலி

காரைக்கால் : காரைக்காலில் கோவில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் இறந்தார்.காரைக்கால், சின்னகண்ணு செட்டி தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி லதா; கூலி வேலை செய்கிறார். இவரது மகன் பிரதாப், 12, அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார்.நேற்று முன்தினம் லதா கட்டட வேலைக்கு சென்றார். பள்ளி விடுமுறை என்பதால் பிரதாப் தனது நண்பர்களுடன் கபடி விளையாட போவதாக சொல்லிவிட்டு சென்றார். வெகு நேரம் ஆகியும் பிரதாப் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து லதா நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் கோவில்பத்து கோவில் குளத்தில் பிரதாப் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை