மேலும் செய்திகள்
கறவை மாடுகள் வளர்ப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
23-Dec-2024
நெட்டப்பாக்கம்: கடுவனுார் கிராமத்தில் பூச்சிக்கொல்லி வழிமுறைகள் குறித்து வேளாண் கல்லுாரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.காரைக்கால், வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் அஸ்மிதா, அஞ்சு, அருள்மொழி, சுஜித்ராதேவி, தர்ஷினி, லத்திகா, சந்தியாஸ்ரீ, பாரதி, துரை வினோதா, ஹர்சவர்த்தினி, வேணிஸ்ரீ ஆகியோர் கடுவனுார் கிராமத்தில் வேளாண் அலுவலர் புவனேஸ்வரி தலைமையில், பூச்சிக்கொல்லி வழிமுறைகள், தடுப்பு மற்றும் விதை நேர்த்தியின் முக்கியத்துவம், அவற்றின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர். கடுவனுார், பனையடிக்குப்பம், கரையாம்புத்துார் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
23-Dec-2024