உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்கள் களப்பயணம்

மாணவர்கள் களப்பயணம்

நெட்டப்பாக்கம், : கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 60 பேர், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு களப்பயணம் சென்றனர். அங்கு கல்லுாரி, மருத்துவமனையை பார்வையிட்ட மாணவிகள், டாக்டர்களுடன் கலந்துரையாடினர். மருத்துவக் கல்லூரியில் சேரும் வழிமுறைகள், அதற்கு எப்படி தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று பலவிதமான கேள்விகளை மருத்துவரிடம் கேட்டு அறிந்தனர். தொடர்ந்து மாணவிகள் விமான நிலையம், தலைமை தபால் நிலையம், ரோமன் ரோலன் நூலகம், மியூசியம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்து அறிவு திறனை வளர்த்துக் கொண்டனர். மாணவிகளுடன் பள்ளி துணை முதல்வர் சித்ரா, பொறுப்பாசிரியர் ஸ்ரீதரன் ஆகியோர் மாணவிகளை வழிநடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ