உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்கலை., துணைவேந்தரை கண்டித்து 3 நாளாக மாணவர்கள் போராட்டம்

பல்கலை., துணைவேந்தரை கண்டித்து 3 நாளாக மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தரை கண்டித்து  மாணவர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தினர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மை கையாளுவதில் தவறு நடந்துள்ளதாக ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினர் துணை வேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 3வது நாளாக நடந்த தொடர் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கை மற்றும்  கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு, மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் பணத்தை தன்னுடைய அலுவலகத்தை ஆடம்பரமாக கட்டமைப்பதில் செலவு செய்யும் துணை வேந்தர், மாணவர்களின் அடிப்படை உரிமையான விடுதி உணவு, குடிநீர் குறைபாடு, தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை