உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் 

மாணவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் 

புதுச்சேரி : இலவச லேப்டாப் வழங்க கோரி மாணவர்கள் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.புதுச்சேரியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க கோரி, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் கூடிய மாணவ மாணவிகள் ஊர்வலமாக புறப்பட்டனர்.அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் முரளி தலைமை தாங்கினார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி ஜென்மராகினி மாதா கோவில் அருகே வந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இலவச லேப்டாப் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர். சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை