உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்ட மாணவர்கள்

போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்ட மாணவர்கள்

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்ட மாணவர்களுக்கு, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர்கள் 30 பேர், கல்வி களப்பயணத்தின் ஒரு பகுதியாக காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனை தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமையில் வந்தனர்.அவர்களை சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வரவேற்று, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் போலீஸ் அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.தொடர்ந்து, அவர்களுக்கு குற்றத் தடுப்பு, விசாரணை, பொதுப் பாதுகாப்பு மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகளை போலீசார் விளக்கினர். சமூகத்தில் போலீசாரின் முக்கியத்துவம், தங்களது பணியின் போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மாணவர்கள் விளக்கம் அளித்தனர். பின், 'சமூகத்தில் போலீசாரின் பங்கு' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி