பொதுத் தேர்வில் சாதித்த மாணவிகள் கவுரவிப்பு
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவர்கள் உருவாக்கியுள்ள உண்மை தோழர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு பள்ளியின் பொறுப்பு ஆசிரியர்கள் விஜயகுமார், கணேசன் முன்னிலை வகித்தனர். நலச் சங்க தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். செயலாளர் அஷ்ரப் அலி, பொருளாளர் கலாநிதி மற்றும் சங்க உறுப்பினர்கள், நடந்து முடிந்த பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள் கிருத்திகா, குணஸ்ரீ, புவனேஸ்வரி ஆகியோருக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினர்.