உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுப்பையா சாலை படுமோசம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி

சுப்பையா சாலை படுமோசம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி

புதுச்சேரி : ரயில் நிலையம் அமைந்துள்ள சுப்பையா சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையாக சுப்பையா சாலை உள்ளது. கடந்த ஓராண்டாக இந்த சாலை கந்தலாகி கிடக்கிறது. கடற்கரை சாலையில் அமைந்துள்ள டூப்ளக்ஸ் சிலை அருகில் துவங்கி, அண்ணா சதுக்கம் சிக்னல் வரையிலான 2 கி.மீ., தொலைவிற்கு சாலையின் நடுவில் ஜல்லிகள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது. இதனால் சாலை குறுகலாக மாறி விட்டது.பல இடங்களில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு மரண சாலையாக அச்சுறுத்தி வருகிறது. சிதறிய ஜல்லிகள் சறுக்கி விடுவதால், டூ வீலரில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.மேலும், இந்த சாலையில் எழுகின்ற புழுதி புயலாலும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த சாலை வழியாக உப்பளம் பெத்திசெமினார், அமலோற்பவம், இமாகுலேட் போன்ற பள்ளிகளுக்கும், இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் மற்றும் துறைமுகத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை, போர்க்கால அடிப்படையில் சரி செய்ய பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை