உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குமாரப்பாளையத்தில் தரமற்ற தார் சாலை பணி: வீடியோ வைரல்

குமாரப்பாளையத்தில் தரமற்ற தார் சாலை பணி: வீடியோ வைரல்

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி குமாரபாளையத்தில், பொதுப்பணித்துறை மூலம் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் உட்புற சாலைகள் மேம்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.இப்பணியில், சாலைகள் முழுவதும் ஒன்றரை கற்கள் நிரப்பப்படாமல், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்பார்வையின்றி,தரமற்ற முறையில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.அதில், புதிதாக அமைக்கப்பட்டுவரும் சாலை 1 செ.மீ.,க்கும் குறைவாக இருப்பதாகவும், சாலையோரங்கள் சீரமைக்கப்படாமலும் தரமற்ற முறையில் தார்சாலை அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை