மேலும் செய்திகள்
சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது
23-Sep-2024
புதுச்சேரி: புதுச்சேரியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், ஒரே நாளில் கஞ்சா விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் இளைஞர்களை குறி வைத்து நடத்தும் கஞ்சா விற்பனையை ஒழிக்க புதிய டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டுள்ளார். இதனால் கஞ்சா விற்பனையை போலீசார் தீவிரமாக கண்காணித்து தடுக்கும் செயலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோரிமேடு சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். சாரம், திருமுடிசேதுராமன் நகர், ஸ்ரீவாரி அப்பார்ட்மெண்ட் அருகே சந்தேகத்திடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஜான் விக்டர், 20; என்பதும், 15 கிராம் கஞ்சா சிறிய பொட்டலங்களில் மறைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. ஜான் விக்டரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுபோல் உருளையன்பேட்டை, குண்டுசாலை, ரயில்பாதை அருகே கஞ்சா விற்பனை செய்த சின்னையாபுரம், ராஜகோபால் கிராமணி தோட்டம், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகன் ஸ்ரீதர், 19; சுகந்தியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சுகன்ராஜ் மகன் ராகுல், 19; நெல்லித்தோப்பு கோவிந்த நாயக்கர் வீதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் அன்புமணி, 21; ஆகிய மூவரை கைது செய்து 54 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், அரும்பார்த்தபுரம் புது வீதியைச் சேர்ந்த பிரசாந்த், 22; பெரியக்கடை பகுதியில் ஆகாஷ், 24; அஜித், 26; ஈஸ்வரன், 20; வில்லியனுாரில், குமார், 20; சரண், 23; மைக்கில்ராஜ், 21; வின்சன்ட், 21; ஆகிய நான்குபேரை கைது செய்து 17 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசாரின் திடீர் சோதனையில் ஒரே நாளில் 13 பேர் கைது செய்யப்பட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
23-Sep-2024