உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் தற்கொலை

சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் தற்கொலை

புதுச்சேரி: ஷேர் மார்க்கெட்டில் பணம் செலுத்தி நஷ்டம் ஏற்பட்டதால், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி ரெயின்போ நகர், 7 வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 41; இளங்கோ நகரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.சிவப்பிரகாசம் ஷேர் மார்க்கெட்டில் பணம் செலுத்தி தொழில் செய்து வந்துள்ளார். அதில், நஷ்டம் ஏற்பட்டு, பணத்தை இழந்ததால், மனமுடைந்து காணப்பட்டார். நேற்று மாலை வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொாண்டார். புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை