| ADDED : செப் 18, 2026 11:53 PM
புதுச்சேரி: தென் மண்டல அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி முதல் பரிசு பெற்றது. இந்திய தடகள சம்மேளனம் சார்பில், 37-வது தென் மண்டல அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்து வந்தது. 3 நாட்கள் நடந்த இப்போட்டியில், புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா உள்பட 7 மாநிலங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இறுதிப்போட்டியில் தமிழக அணி வீரர்கள் முதலிடம், கார்நாடாக அணியினர் 2ம் இடம் பிடித்தனர். போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக அரசு கொறடா ஆறுமுகம் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு ஒட்டுமொத்த போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக அணிக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.