உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழக டெக்னிக் புதுச்சேரியிலுமா?

தமிழக டெக்னிக் புதுச்சேரியிலுமா?

உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி பின்புறம், மேற்கு கிருஷ்ணா நகரில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி சமீபத்தில் நடந்தது.தமிழகத்தில் உள்ளாட்சிதுறைகளில் நடக்கும் பணிகளில் அடி பம்பு, மின் கம்பம் உள்ளிட்டவைகளை அகற்றாமல் அதனை வைத்து சாலை போடும் படங்கள் நாளிதழ்கள் மற்றும் சமூக வலை தளங்களில் வைரலாகி பேசும் பொருளானது. அரசின் இது போன்ற நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் கண்டித்தனர்.புதுச்சேரியிலும் இது போன்ற சம்பவம் அரங்கேற்றியுள்ளது. மேற்கு கிருஷ்ணா நகர் சாலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றி வாய்க்கால் ஓரமாக மாற்றி அமைத்து சாலை அமைக்க வேண்டும். ஆனால், மின் கம்பத்தை அகற்றாமல், நடுரோட்டில் உள்ள மின் கம்பத்துடன் தார் சாலை அமைத்துள்ளனர். இதை பார்க்கும் பொதுமக்கள், தமிழக டெக்னிக் புதுச்சேரியிலுமா என நொந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை