உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு

விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு

காரைக்கால்: காரைக்காலில் விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காரைக்கால், சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ் மகன் அருண், 18; கூலி தொழிலாளி. இவர் தனது பைக்கில் கடந்த 16ம் தேதி நாகப்பட்டினம் சென்று விட்டு, திருப்பட்டினம் பைபாஸ் வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சாலை வளைவில் திரும்பும் போது பைக் கட்டுப்பட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.படுகாயமடைந்த அருண், புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை