மேலும் செய்திகள்
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
24-Jul-2025
முதல்வர் பிறந்த நாள் கால்பந்து போட்டி
07-Aug-2025
புதுச்சேரி : மாநில அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, சபாநாயகர் செல்வம் பரிசுகள் வழங்கினார். டென்னிஸ் பந்து கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி, ஸ்மாஷ் ஈகல்ஸ் கிளப் சார்பில், தவளக்குப்பம் ராஜிவ்காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்தில், 12வது சப் ஜூனியர் மாநில அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில், புதுச்சேரி மாநில அளவில், ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்றனர். தலைமை விருந்தினராக சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். சிறுவர் பிரிவில் ஏ.பி.ஜெ., டென்னிஸ் பந்து கிரிக்கெட் கிளப் முதல் பரிசும், லோட்டஸ் கிரிக்கெட் கிளப் இரண்டாம் பரிசும், ஸ்மாஷ் ஈகல்ஸ் கிரிக்கெட் கிளப் மூன்றாம் பரிசு பெற்றன. சிறுமியர் பிரிவில், ஜெ.ஜெ. கிரிக்கெட் கிளப் முதல் பரிசு, காமராஜர் கிரிக்கெட் கிளப் இரண்டாம் பரிசு, அருணை கிரிக்கெட் கிளப் மூன்றாம் பரிசு பெற்றனர். அவர்களை செயலாளர் ரத்தன பாண்டியன் பாராட்டினார்.
24-Jul-2025
07-Aug-2025