மேலும் செய்திகள்
கோயில்களில் சிறப்பு வழிபாடு
15-Jan-2025
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள முருகன் கோவில்களில், தை மாத கிருத்திகையொட்டி, சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.புதுச்சேரி சுப்பையா சாலை, ரயில் நிலையம் எதிரே கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. ஒவ்வொரு வார செவ்வாய் கிழமைகளில், பாலசுப்பிரமணியர் சாமிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.இந்நிலையில், தை கிருத்திகையொட்டி, நேற்று காலை, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, அலங்காரம் செய்து, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.அதே போல, கதிர்காமம் முருகன் கோவில், லாஸ்பேட்டை சிவசுப்பிரமணியன் கோவில், காலாப்பட்டு பாலமுருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
15-Jan-2025