உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரியாங்குப்பம் கோவிலில் தைப்பூச காவடி திருவிழா

அரியாங்குப்பம் கோவிலில் தைப்பூச காவடி திருவிழா

புதுச்சேரி : அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் தைப்பூச காவடி திருவிழா நடந்தது.இக்கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி சன்னதியில், தைப்பூசத்தை முன்னிட்டு, கடந்த 19ம் தேதி, சிறப்பு பூஜையுடன் விரதம் துவங்கியது. தொடர்ந்து, தினமும் மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிேஷக ஆராதனைகள் நடந்து வந்தன.தைப்பூசமான நேற்று காலை 6:00 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கும், காவடிகளுக்கும் அபிேஷகம் நடந்தது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, காவடி ஏந்திய பக்தர்களுடன் சுவாமி புறப்பாடு நடந்தது.பிரதான வீதிகள் வழியாக காவடி ஊர்வலம் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது. விழாவில் பாஸ்கர் எம்.எல்.ஏ., அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, சிவசக்தி வேலன் ஆன்மிகக் குழு கந்தர் சஷ்டி - தைப்பூச விழாக்குழுவின் தலைவர் ருத்ரகுமார், அறங்காவலர் குழு தலைவர் வீரப்பன் மற்றும் நிர்வாகிகள், கோவில் அர்ச்சகர் கோபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ