புதுச்சேரி கிரெடாய் தலைவராக தங்க மணிமாறன் பதவியேற்பு
புதுச்சேரி : புதுச்சேரி 'கிரெடாய்' தலைவராக தங்க மணிமாறன் மற்றும் அவருடன் பல்வேறு நிர்வாகிககள் பதவியேற்றனர்.இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான புதுச்சேரி 'கிரெடாய்' 2025-2027,ம் ஆண்டிற்கான புதிய தலைமை குழுவை அறிவித்துள்ளது. இதன் மேம்பாட்டாளர்களை ஒன்றிணைக்கும் விழா சமீபத்தில் நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் புதுச்சேரி கிரெடாய் தலைவராக தங்க மணிமாறன் பதவியேற்றார். இவருடன், துணைத் தலைவர் - விஜய்நேரு; செயலாளர் - செல்வ முத்துக்குமரன்; இணைச்செயலாளர் - மகேஸ்வரன்; பொருளாளர் - கருணாநிதி மற்றும் இதர செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர்.நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது குறித்து தங்க மணிமாறன் கூறுகையில், 'புதுச்சேரியில் முற்போக்கான நெகிழ்ச்சியான ரியல் எஸ்டேட் சூழலை வளர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம். 'கிரெடாய்' டெவலப்பர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வீடு வாங்குபவர்களுக்கு இடையே ஒரு பாலமாக விளங்குகிறது' என்றார்.