உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பதவி உயர்வு பெற்ற பொறியாளர்கள் முதல்வர், அமைச்சருக்கு நன்றி

பதவி உயர்வு பெற்ற பொறியாளர்கள் முதல்வர், அமைச்சருக்கு நன்றி

புதுச்சேரி : பதவி உயர்வு பெற்ற பொதுப்பணித் துறை உதவி பொறியாளர்கள் சட்டசபையில் அமைச்சர் லட்சுமிநாராயணனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். புதுச்சேரி பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள பொறியாளர் பணி இடங்களை நிரப்பநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதேபோல் பதவி உயர்வு அளிக்கும் பணிகளும் பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அதன் ஒரு பகுதியாக, நான்கு உதவி பொறியாளர்கள், பொறுப்பு அடிப்படையில் செயற்பொறியாளர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவி பொறியாளர்கள், சீனிவாசன் பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் சாலை வடக்கு கோட்டத்திற்கும், ஜின்னி சாரா ஜேக்கப் பொதுப்பணித் துறை திட்ட பிரிவிக்கும்,பக்தவச்சலம் பாட்கோ நிறுவனத்திற்கும்,வாசு பொது சுகாதார கோட்டத்திற்கு செயற் பொறியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.பதவி உயர்வு பெற்ற பொதுப்பணித் துறை உதவி பொறியாளர்கள் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை