உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நர்சிங் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் வன்கொடுமை பிரிவில் விசாரணை

நர்சிங் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் வன்கொடுமை பிரிவில் விசாரணை

புதுச்சேரி : கதிர்காமம் அரசு செவிலியர் கல்லுாரி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கதிர்காமம் அரசு செவிலியர் கல்லுாரியில் 2ம் ஆண்டு மாணவர் வன்கொடுமைக்கு ஆளாகினார். இதுகுறித்து பாதித்த மாணவர் தரப்பில், கல்லுாரி முதல்வர், பேராசிரியர் மற்றும் ஒரு மாணவர் உட்பட 5 பேர் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்க கல்லுாரி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி கல்லுாரி நிர்வாகம், கல்லுாரி முதல்வர், 3 பேராசிரியர்கள் மற்றும் ஒரு மாணவரிடம் விசாரித்து, சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர், தான் வன்கொடுமைக்கு உள்ளானதாக கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் ஒரு மாணவர் என, 5 பேர் மீது கவர்னர், கலெக்டர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் புகாரை ஏற்ற ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க பி.சி.ஆர்., பிரிவுக்கு பரிந்துரை செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சத்யநாராயணன், நர்சிங் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை