சீர்திருத்தத்துறை அலுவலக ஊழியர் செய்முறை தேர்வு 29ல் நடக்கிறது
புதுச்சேரி; புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் திறன் பெற்றிராத அலுவலக ஊழியர் பணிக்கு ஒத்திவைக்கப்பட்ட செய்முறை தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது.இது குறித்து அரசு சார்பு (தேர்வு பிரிவு) செயலர் ஜெய்சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் திறன் பெற்றிராத அலுவலக ஊழியர் பணிகளை நிரப்புவதற்காக கடந்த 6ம் தேதி நடப்பதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட செய்முறை தேர்வு வரும் 29ம் தேதி புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் நடக்கிறது.விண்ணப்பதாரர்கள் முன்னர் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டையே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய நுழைவுச்சீட்டு வழங்கப்படமாட்டாது. நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளில் மாற்றம் ஏதும் இல்லை. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.