உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தை தத்து கொடுப்பதாக கூறி தம்பதியிடம் ரூ. 1 லட்சம் மோசடி

குழந்தை தத்து கொடுப்பதாக கூறி தம்பதியிடம் ரூ. 1 லட்சம் மோசடி

புதுச்சேரி: குழந்தை தத்து கொடுப்பதாக கூறி, புதுச்சேரி தம்பதியிடம் 1 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரியைச் சேர்ந்தவர் சினோத். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியும் குழந்தை இல்லை. பேஸ்புக்கில், குழந்தை தத்தெடுக்க விருப்பமா? அன்பு இல்லம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளுங்கள் என்ற விளம்பரம் வந்தது.அதில் இருந்த தொலைபேசி எண்ணை சினோத் தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசியவர், அரசு வழிகாட்டுதல்படி குழந்தை தத்து தருவதாக, 10 குழந்தைகளின் படங்களை அனுப்பி, அதில் எந்த குழந்தை வேண்டும் எனக் கேட்டார். மேலும், அன்பு இல்லம் அறக்கட்டளையில் குழந்தைகளை தத்து கொடுக்கும் போட்டோக்களை அனுப்பினார்.அதனை நம்பிய சினோத், 4 வயது குழந்தையை தத்து எடுக்க விரும்பம் தெரிவித்தார். அதற்கு அரசு மற்றும் அறக்கட்டளைக்கு சில கட்டணங்கள் செலுத்த வேண்டும் எனக்கூறி பல்வேறு கட்டமாக வங்கி கணக்குகள் மூலம் 1.04 லட்சம் ரூபாய் பெற்ற மர்ம கும்பல், குழந்தையை தத்து கொடுக்காமல் காலம் கடத்தியது.சந்தேகமடைந்து சினோத், மர்ம நபர்களை விசாரிக்க முயன்றபோது அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். அவர், அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில், 'ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி பொருட்களை வாங்க பணம் செலுத்த வேண்டாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை