மேலும் செய்திகள்
மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்
29-Sep-2024
அரியாங்குப்பம்: கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு, பேரனுடன் சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.மூலக்குளத்தை சேர்ந்த ராஜ்குமார், 39; இவரது மனைவி சவிதா, 38; இவர் மனநிலை பாதிப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கணவர், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, சவிதா, தனது 3 வயது மகனுடன், தவளக்குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார்.இந்நிலையில், சவிதா, தனது மகனை அழைத்து, கொண்டு, கணவர் வீட்டுக்கு செல்வதாக, தனது பெற்றோரிடம் கூறி விட்டு நேற்று முன்தினம் சென்றார். அவரது பெற்றோர் மருமகனிடம், தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் அங்கு செல்லவில்லை என தெரிய வந்தது.அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து, அவரது தந்தை ஜோதி தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
29-Sep-2024