| ADDED : செப் 10, 2026 07:52 PM
அரியாங்குப்பம்: கொடுத்த கடனை கேட்டவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். தவளக்குப்பம், முத்துமுதலியார் நகரை சேர்ந்தவர் மிதுனன், 56. இவர், புதுக்குப்பத்தை சேர்ந்த தேசிங்கு என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். கொடுத்த கடனை மிதுனன் திருப்பி கேட்டார். அதில், ஆத்திரமடைந்த தேசிங்கு அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து மிதுனன் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, தேசிங்கை தேடி வருகின்றனர்.