மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
கஞ்சா இலைகளை சப்ளை செய்பவர்களை தேடிபுதுச்சேரி போலீசார் ஆந்திரா, திருவண்ணாமலை போன்ற இடங்களுக்கு அலைந்து கொண்டு இருக்க, அதே நேரத்தில் கஞ்சா வேறு வடிவத்தில் புதுச்சேரியில் நுழைந்து இளைஞர்களை சீரழித்து வருகிறது.புதுச்சேரியில் ஒரு காலத்தில் காஸ்ட்லியான போதை வஸ்தாக இருந்த கஞ்சா இன்றைக்கு சீப்பாக மாறிவிட்டது; சர்வசாதாரணமாக கஞ்சா கை மாறுகிறது. இளைஞர்கள் சீரழிவதை தடுக்க கஞ்சா கும்பலை அடியோடு பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதை தொடர்ந்து, கஞ்சா கும்பலை பொறி வைத்து பிடித்து போலீசார் சிறையில் தள்ளி வருகின்றனர். இதனை கண்ட கஞ்சா கும்பல் உஷாராகியுள்ளது. புது டெக்னிக்கை கையாண்டு கஞ்சா சப்ளை செய்து வருகிறது. இதனால் கஞ்சா கும்பலை பிடிப்பது போலீசாருக்கு சவாலாக மாறியுள்ளது.கஞ்சா இலைகளை தேடி ஆந்திரா, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு புதுச்சேரி போலீசார் அலைந்து கொண்டு இருக்க, அதே நேரத்தில் கஞ்சா வேறு வடிவத்தில் புதுச்சேரியில் நுழைந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒன்று தான் 'கஞ்சா ஆயில்'பார்ப்பதற்கு அசல் தேன் பாட்டில் போலவே இருக்கும் கஞ்சா ஆயில் பாட்டிலை கண்டால் யாருக்கும் சந்தேகம் வராது. ஏதோ இளைஞர்கள் வீட்டிற்கு தேன் வாங்கி செல்லுகின்றனர் என்று தான் நினைக்க தோன்றும். ஆனால், அதில் இருப்பது ஆபத்தான கஞ்சா ஆயில்.இன்றைய இளைஞர்களின் ஹாட் தேர்வு இது தான். பாட்டிலில் இருந்து கஞ்சா ஆயிலை சில மில்லி லிட்டர் எடுத்து பேப்பரில் ஊற்றி, அதன் கீழ் எரிய விடுகின்றனர். அடுத்த நிமிடங்களில் கஞ்சா ஆயில் பேப்பர் எரிந்து புகையை கமகமவென வெளியே கக்குகிறது. இந்த புகையை முகர்ந்து பார்க்கும் இளைஞர்கள் தங்களை மறந்து பல மணி நேரம் போதையில் மூழ்கி கிடக்கின்றனர்.இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், டாக்டருக்கு படிக்கும் மருத்துவ மாணவர்கள்கூட இதில் தங்களை மறந்து மூழ்கி கிடப்பது தான்.கஞ்சா எந்த வடிவத்தில் நுழைந்தாலும், அது சிக்கல் தான். இளைஞர்களின் எதிர்காலத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்து விடும். புதிய பரிமாணம் எடுத்து புதுச்சேரி இளைஞர்களை தனி போதை உலகத்திற்கு அழைத்து சென்று கொண்டு இருக்கும் கஞ்சா ஆயில் விற்பனையையும் போலீசார் கண்டுபிடித்து கூண்டோடு அகற்ற வேண்டும் என்பது தான் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago