உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருட வந்தவர் தப்பியோட்டம்

திருட வந்தவர் தப்பியோட்டம்

அரியாங்குப்பம்: முதலியார்பேட்டை திரு.வி.க., நகரை சேர்ந்தவர் பாலா, 42; மரப்பாலம் நுாறடி சாலையில் ஏ.சி. மெக்கானிக் கடை வைத்துள்ளார். கார் வேலை தொடர்பாக நேற்று காலை கடைக்கு வந்தார். கடையில் வெளிப் பகுதியில் இருந்த காரின் பழைய உதிரிபாகங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்து கொண்டிருந்தார். எதற்காக பொருட்களை எடுக்கறீர்கள் என அவர் கேட்ட போது அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். முதலியார்பேட்டை போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ