மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
5 hour(s) ago
புதுச்சேரி: ஏம்பலத்தில் மதுக்கடையில் நேற்று காணும் பொங்கல் என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு பாம்பாட்டி முதியவர் ஒருவர் கூடையுடன் மதுக்கடைக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களிடம் பொங்கல் காசு கேட்டார்.அவரவர் தங்களிடம் இருந்த பணத்தை கொடுத்தனர். குடிமகன் ஒருவர்,தான் 100 ரூபாய் தருகிறேன். கூடைக்குள் இருக்கும் பாம்பை எடுத்து, எனது நண்பரின் கழுத்தில் மாலையாக போட முடியுமா, என்றார்.உடனே, பாம்பாட்டி நல்ல பாம்பை எடுத்து, அவர் காட்டிய நபரின் கழுத்தில் மாலையாக போட்டார். அந்த நபர் போதையில், கழுத்தில் பாம்புடன் சாகசம் செய்ய முயன்றார்.உடனே பாம்பாட்டி பாம்பை எடுத்து கூடைக்குள் வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago