மேலும் செய்திகள்
சாலையோர ஆக்கிரமிப்பு சூரம்பட்டியில் அகற்றம்
15-Oct-2024
வில்லியனுார்: வில்லியனுார் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றியதால் ஆவேசமடைந்த வணிகர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.வில்லியனூர் நான்கு மாட வீதி சாலைகளில், கழிவுநீர் வாய்க்கால் தாண்டி, சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வீடுகளின் கார் பார்க்கிங் ரேம்புகள் விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் சாலைகளை ஆக்கிரமித்து நடைபாதை கடைகளும், சாலையின் இரு புறங்களிலும் பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதால் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வந்தது.வில்லியனுார் மேற்கு பகுதி சப் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு தலைமையில் வில்லியனுார் மாட வீதிகள் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய் துறை, பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் இணைந்து நேற்று மாலை பொக்லைன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சாலையோரம் வைத்திருந்த தள்ளுவண்டி சேதமடைந்தது. இதனால் ஆவேசடைந்த வணிகர்கள், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏழைமாரியம்மன் கோவில் எதிரே மறியலில் ஈடுபட்டனர்.அப்போது சிறு வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலன் கருதி தென்கோபுர வீதியில் மாலை நேரங்களில் கடை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்லியனுார் மார்க்கெட் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து 10 நிமிடங்களில் அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து கிழக்கு மாட வீதியில் இருந்த ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
15-Oct-2024