மேலும் செய்திகள்
காற்றில் பறந்த பந்தல்
10-Sep-2024
புதுச்சேரி: இ.சி.ஆரில் வேனில் பாதுகாப்பின்றி ஏற்றி வந்த 20 அடி நீளமுள்ள கலாய் ஷீட் திடீரென பறந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி இ.சி.ஆரில் நேற்று பகல் 1:15 மணி அளவில் பி.ஒய்.05.சி.4044 பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வேனில் 20 அடி நீளமுள்ள 5 கலாய் ஷீட்டுகளை கட்டாமல் அஜாக்கிரதையாக ஏற்றிக் கொண்டு ராஜிவ் சதுக்கத்தை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருந்தது.கொட்டுப்பாளையம் சிக்னல் அருகே வேன் சென்றபோது குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர் 'சடன் பிரேக்' அடித்தார். அதில், வேனில் ஏற்றி வந்த கலாய் ஷீட்கள், வேனின் முன்பாக 10 அடி துாரத்திற்கு பறந்து சென்று சாலையில் விழுந்தது.இதனைக் கண்ட அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பு நிலவியது. அதிஷ்டவசமாக கலாய் ஷீட்கள் யார் மீதும் விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இதுபோன்று ஆபத்தான வகையில் ஷீட்களை ஏற்றிச் செல்வதை போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10-Sep-2024