மொபைல் போன் டவர் வைக்க மக்கள் எதிர்ப்பால், பரபரப்பு
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே மொபைல் போன் டவர் வைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. தவளக்குப்பம் நல்லவாடு சாலை, ஆண்டியார்பாளையம் பகுதியில், தனியார் நபருக்கு சொந்தமான இடத்தில் தனியார் மொபைல் நிறுவனம் 5ஜி டவர் அமைக்க ஏற்பாடு செய்தனர். இதுபற்றி தவலறிந்த, அப்பகுதியில் உள்ள குடியிருப்பவர்கள், குடியிருக்கும் பகுதியில் டவர் அமைத்தால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என டவர் அமைக்க நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து, தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார், டவர் அமைக்கும் நிறுவனத்தின் நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து, டவரை மற்றொரு இடத்தில் அமைப்பதாக போலீசாரிடம் கூறியதை அடுத்து, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.