உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய அமைச்சராக திருமுருகன் வரும் 14ம் தேதி பதவியேற்பு

புதிய அமைச்சராக திருமுருகன் வரும் 14ம் தேதி பதவியேற்பு

புதுச்சேரி, : புதுச்சேரியில் திருமுருகன் எம்.எல்.ஏ., புதிய அமைச்சராக வரும் 14ம் தேதி பதவியேற்கிறார்.புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான, அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த, சந்திர பிரியங்கா, கடந்த, 2023, அக்டோபரில், நீக்கப்பட்டார். அதன் பிறகு, புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை.சந்திரபிரியங்கா பதவி வகித்த துறைகளை, கூடுதலாக முதல்வர் கவனித்து வந்தார். இதனால், புதிய அமைச்சர் எப்போது நியமிக்கப்படுவார் என்ற கேள்வி, கடந்த பல மாதங்களாக நீடித்து வந்தது.இந்நிலையில், மத்திய அரசின் உள்துறை இணைச்செயலர் அசுதோஷ் அக்னிேஹாத்ரி, கடந்த, 5ம் தேதி வெளியிட்ட உத்தரவில், புதுச்சேரி அமைச்சராக திருமுருகனை நியமிக்க, குடியரசு தலைவர் ஒப்புதல் தந்துள்ளதாக, தெரிவித்தார்.புதிய அமைச்சராக, திருமுருகன், கடந்த, 7 ம் தேதி பதவியேற்று கொள்வார் என்ற தகவல் பரவியது. ஆனால், அப்போது சிறுமி படுகொலை சம்பவத்தால், புதுச்சேரி முழுதும், போராட்டம் வெடித்ததால், அவர் பதவியேற்பு ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் திருமுருகன் பதவியேற்பு விழா வரும், 14ம் தேதி காலை 10:45 மணிக்கு நடக்க உள்ளது.அமைச்சராக பதவியேற்க உள்ள திருமுருகனுக்கு, கவர்னர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதையொட்டி, சட்டசபையில் புதிய அமைச்சருக்கான அலுவக அறை தயார் செய்யப்பட்டு வருகிறது.இதனிடையே விரைவில் அமைச்சர்கள் வகிக்கும், இலாக்காக்களை முதல்வர் ரங்கசாமி மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாக, தெரிகிறது. புதிய அமைச்சருக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட உள்ள அதே சமயத்தில், மற்ற அமைச்சர்களின் குறிப்பிட்ட சில இலாக்காக்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

14ல் அமைச்சர் பதவியேற்பு ஏன்?

புதிய அமைச்சர் பதவியேற்பு விழாவை இன்று நடத்த முதலில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இன்று மதியம் வரை பிரதமை திதி உள்ளது. அமாவாசைக்கு அடுத்த திதியான, பிரதமையில், மங்கள, சுப நிகழ்ச்சிகளை செய்ய மாட்டார்கள். இன்று மதியத்துடன் பிரதமை திதி முடிந்தாலும், இந்த நாள் சிறப்பானதாக இல்லை. வரும், 14ம் தேதி வளர்பிறை பஞ்சமி என்பதால், அன்று, பதவியேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை