உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளியில் முப்பெரும் விழா

பள்ளியில் முப்பெரும் விழா

புதுச்சேரி: வில்லியனுார் பெரிய பேட் அரசு தொடக்கப் பள்ளி யில், பள்ளி கட்டடம் திறப்பு, உடற்கல்வி சீருடை அடையாள அட்டை, எண்ணறிவு எழுத்தறிவு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது. தலைமையாசிரியர் ரேணுகா வரவேற்றார். புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டடத்தை முதன்மை கல்வி அலுவலர் குலேசேகரன் திறந்து வைத்து, உடற்கல்வி சீருடை மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார். அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி துணை ஆய்வாளர் திருவரசன் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். விழா ஏற்பாடுகளை, ஆசிரியர்க ள் மணிமாறன், வெங்கடேசன், கிரிஜா, லட்சுமிகாந்தா, சுமதி, பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ