உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி பத்திரங்களுடன் உலா வரும் ரவுடிகள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் திக்... திக்...

போலி பத்திரங்களுடன் உலா வரும் ரவுடிகள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் திக்... திக்...

போலி பத்திரங்களுடன் உலா வரும் ரவுடிகளால் வீடு கட்ட நினைப்பவர்கள் நிம்மதியை இழந்து வருகின்றனர்.புதுச்சேரி மாநிலத்தில் கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு மற்றும் தனிநபர் நிலங்கள் குறிப்பாக, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களை போலி பத்திரம் தயார் செய்து கபளீகரம் செய்வது என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட ஆரம்பித்தால் போதும் புது தலைவலியும், சிக்கலும் வருகிறது.இது, எங்களுடைய தாத்தாவிற்கு சொந்தமான பூர்வீகமான சொத்து. எங்களுக்கும் சொத்தில் உரிமை உள்ளது என்று போலி பத்திரங்களுடன் சில கும்பல்கள் ரவுடிகள் பின்னணியுடன் தலையிடுவது அதிகரித்து வருகிறது.போலீஸ், கோர்ட் என சென்றால் பல ஆண்டுகள் உருண்டோடி விடும், ரவுடிகளாக உள்ளனர், எதற்கு வம்பு-தும்பு என்று ஒரு பெரிய தொகை செட்டில் செய்துவிட்டு, வீட்டின் உரிமையாளர்கள் அமைதியாகி விடுகின்றனர்.இதுகுறித்து பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களிடம் கேட்டபோது, 'நாங்கள் எங்கள் குடும்பத்துடன் பிரான்சில் வசிக்கிறோம். புதுச்சேரியிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, நிலம், மனை உள்ளிட்ட சொத்துகளை வாங்கி வைத்துள்ளோம். ஆண்டிற்கு ஒருமுறை அல்லது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுச்சேரிக்கு வருகிறோம்.அப்படி வந்து பார்க்கும்போது, எங்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுகிறது. எங்கள் சொத்துகளை போலி பத்திரம் தயாரித்து கும்பல் அபகரித்து சொந்தம் கொண்டாடுகிறது. இதனால், நிலை குலைந்து போய் விடுகிறோம்.பிரான்சில் இருந்து ஒரு மாதம், இரண்டு மாதம் விடுப்பில் வருகிறோம்.போலீசுக்கு புகார் சொல்லிவிட்டு பல மாதங்கள் இங்கே அலைய முடியாது. காலத்திற்கும் நில பிரச்னையுடன் இருக்க முடியாது. வேறுவழியின்றி அவர்களுக்கு ஏதாவது தொகை செட்டில் செய்துவிட்டு பிரச்னையை தீர்த்து கொள்கிறோம். இதன் காரணமாகவே போலீசுக்கு சொல்வதில்லை' என்றனர்.பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் பிரச்னைக்கு பயந்து ரவுடிகளுடன் சமாதானமாகிவிட்டாலும், இதனை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி