| ADDED : ஆக 24, 2026 07:22 PM
பிரதமரின் ‘ஒரு மாநிலம் ஒரு உலகளாவிய சுற்றுலா தளம்’ திட்டதில், ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் புதுச்சேரியை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கடற்கரை சாலையில் உள்ள சீகல்ஸ் உணவகம், லே கபே, கென்னடி நகரில் உள்ள யாத்திரி நிவாஸ் புதுப்பிக்கப்படும். பழைய துறைமுக வளாகத்தில் உள்ள மாநாட்டு அரங்கம் மற்றும் பொழுதுபோக்கு மையம் ஆகியவற்றிக்கு கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். சுண்ணாம்பாறு படகு குழாமில் நவீன நீர் விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு வசதிகள், உபகரணங்கள் மறுசீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தில், கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள், பன்முக ஊடக விளம்பரங்கள் மற்றும் டிஜிட்டல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2026–27ம் ஆண்டில் சுற்றுலாத் துறைக்காக ரூ55.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.